Sunday, June 26, 2011

எதற்காக இனி பிரார்த்தனைகள்


பிடிவாத  சகியே!

பேசுவதற்கு மொழியில்லா 
காணும் போதெல்லம் 
மௌனித்து ரசித்தேன்..
பேச வேண்டியதை 
கவிதை வடித்தேன்..  
கவி வடித்த 
காகிதம் எல்லாம்
மிதந்தன அந்தரத்தில்- உன் 
பெயரெழுதப்பட்ட ஆனந்தத்தில் ....

இன்று  
உனக்கு கடிதம் எழுத துவங்கையிலே 
காகிதம் எல்லாம் மிதந்தன  
நான் வடித்த கண்ணீரில் 

உன்னை தவிர வேறு உலகம் இல்லை - எனக்கு  
உன்னை தவிர வேறு கிரகமில்லை -  எனக்கு 
உன் மௌன மொழியை படித்து, படித்து 
நான் இப்போதெல்லம் சைகையிலே பேசுகிறேன் 
ஐம்புலனில் இரண்டை தொலைத்தவனாக... 

அதலால்தான் நான் 
கடிதம் எழுதுகிறேன் .. 

அர்த்தமில்லா வாழ்க்கையில் 
அர்த்தமுள்ளது காதல் மட்டும்தான்
காதலுக்கு மொழி முக்கியமில்லை 
காதர்களுக்கு மொழி முக்கையமே..
புரிந்து கொள்வதற்கு அல்ல 
புரியாமையால்  கொல்லாமல் இருப்பதற்கு..

நீ கடல் சேரா நதி என்றால், 
நான் கரை தாண்டாக் கடல். 
என்னால் முடியாது கரைதாண்ட 
என் கரை தாண்டல்,
பல உயிர் தீண்டும்.


நீ 
வழித்துணையா? இல்லை 
வாழ்க்கைத்துணையா? இல்லை
இப்போது போல் எப்போதும் 
விழித்துணையா என நான் அறியேன்.. 


உலகமெல்லம் ஓடுகிறேன் 
உனக்குள் இருக்கும் என்னை 
உணர்த்த.... 
உணர்ந்த நீயும் மௌனம் கொண்டு
என்னைக் கொன்று அதனை ஒழிக்க..

ஆயிரம் அர்த்தங்கள், உன் மௌனத்தில் 
ஆயிரம் அர்த்தத்தில் எதனை எடுப்பேன் உந்தன் மௌனத்தில்....

உன் காதல் மொழி மௌனமாகுகையில்... 
மௌனம் பேசும் வரை காத்திருக்கிறேன்... 

ஆணாக நான் இருந்தும் , 
ஆளாகி நீ இருந்தும் , 
நானாக காதல் சொன்னால் , 
அது அனாகரீகம்......

வாடுகின்ற ஒற்றை ரோஜாவோ, 
உலருகிற இதழ் ஓர முத்தமோ இப்போதைக்கு எனக்கு வேண்டாம்..
" உன்னைக் காதலிக்கிறேன்" என்று ஒரு வார்த்தை சொல்... 
அது போதும் எனக்கு...
காதலி வரும் வரை காத்திருத்தல் சுகம்...,
உனக்கு காதல்வந்தும், 
நீ காதில் ஓதும்வரை காத்திருப்பேன் ஒரு யுகம்


மறதி முக்கியம் மனிதனுக்கு...
ஆனால் நான், உன்னை 
மறக்க மறந்துவிட்டேன்... 

கண்ணீர் சிந்தாதே..... 
கண்ணை மூடி சிந்தி..... 
வரட்டு பிடிவாதத்தையும், 
வீணான பிரர்த்தனையையும் விட்டு விட்டு.................... 

No comments:

Post a Comment